1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

ஜனவரியில் 6 அமெரிக்க வங்கிகள் மூடல்

அமெரிக்கா ஜனவரி வங்கி சால்ட் லேக் சிட்டி மேக்னே
உலக அளவிலான பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய அமெரிக்காவில் அதன் விளைவுகள் தன் பயங்கர முகத்தைக் காட்டிவருகிறது. ஜனவரி மாதம் மட்டும் 6 வங்கிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 6 வங்கிகள் மூடப்படுவது எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாகும்.

சால்ட் லேக் சிட்டியில் உள்ள மேக்னே வங்கி, கிராஃப்டானில் புற நகர் சேமிப்பு வங்கி ஒன்று, ஒகாலா தேசிய வங்கி ஆகியவை கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டுள்ளது.

தேசிய வர்த்தக வங்கி, பேங்க் ஆஃப் கிளார்க் கவுண்டி, சென்டெனியல் வங்கி ஆகியவை இந்த மூடல் பட்டியலில் இணைந்துள்ளது.
About Writer
Webdunia