1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

சின்டிகேட் வங்கி இலாபம் 29% உயர்வு

சின்டிகேட் வங்கி
சின்டிகேட் வங்கியின் நிகர இலாபம், இந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், ரூ352.38 கோடியாக அதிகரித்துள்ளது.

இது சென்ற வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 29% அதிகம்.

இதன் மொத்த வருவாய் ரூ.2,758.52 கோடியாக அதிகரித்துள்ளது. (சென்ற வருடம் மூன்றாவது காலாண்டில் மொத்த வருவாய் ரூ.2,265.23 கோடி).

இதில் வரிக்கு பிந்திய இலாபமாக ( நிகர) ரூ.352.38 கோடி பெற்றுள்ளது. (சென்ற வருடம் மூன்றாவது காலாண்டில் நிகர இலாபம் ரூ.273.19 கோடி).
About Writer
Webdunia