தொடர்புடைய செய்திகள்
- போலீஸை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித்!.. என்னா மனுஷன்!..
- ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?
- வெளிநாட்டு போலீஸ் போல் சிங்கப்பெண் படைக்கு யூனிபார்ம்.. இதை பார்த்தாலே தப்பு செய்றவன் நடுங்கனும்...!
- விஜய் ஆட்சி தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை.. அதற்குள் 4,950 கோடி ரூபாய் முதலீடு.. ஜேகே டயர் நிறுவனம் அறிவிப்பு..!
- தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் அவசர ஆலோசனை!
போலீஸ் எப்பவுமே நல்லவங்க தான்.. அரசியல்வாதிங்க அவங்களை கட்டுப்படுத்துறாங்க: பொதுமக்கள் கருத்து
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை பெரும் நேர்மறையான மாற்றத்தை சந்தித்துள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது.
நமது காவல் துறையினர் எப்போதுமே பொதுமக்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் நல்லவர்கள் தான். ஆனால், கடந்த கால ஆட்சிகளில் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் அத்துமீறிய தலையீடுகளாலும், தேவையற்ற அழுத்தங்களாலும் பல நேரங்களில் போலீசாரின் கைகள் சட்டத்தை கடமை தவறாமல் நிலைநாட்ட முடியாமல் கட்டிப்போடப்பட்டிருந்தன.
தற்போதைய தவெக அரசு, அந்த பழைய அரசியல் கலாச்சாரத்தை முற்றிலுமாக உடைத்தெறிந்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, முற்றிலும் சுதந்திரமாக செயல்பட தற்போதைய முதல்வர் விஜய் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். தவறு செய்பவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, சட்டம் தன் கடமையை செய்யும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுதந்திரமான செயல்பாட்டின் காரணமாக, மாநிலத்தில் குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்து, சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த முழு அதிகாரமும், அரசியல் அழுத்தமற்ற சுதந்திரமும் பொதுமக்கள் மத்தியில் தற்போதைய தவெக அரசின் மீதான நம்பகத்தன்மையையும், பாதுகாப்பையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பொதுமக்கள் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.
Edited by Siva
