ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்கான யூனிட்டுகளை வெளியிட்டு நிதி திரட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதற்காக பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு (மியூச்சுவல் பண்ட்) அனுமதி வழங்குவது பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குச் சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி ஆலோசனை நடத்தி வந்தது. ரியல் எஸ்டேட் சொத்து மதிப்புகளை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதில் செபிக்கும், இந்திய கணக்காளர்...