வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (09:32 IST)

ஏராளமான சத்துகளை தரும் மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் !!

மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடல் வலிமை அதிகரிக்கும், நரம்புகளும் வலுப்படும்.


மாப்பிள்ளை சம்பா அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதசத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் வளமான அளவில் உள்ளன. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடியது.

மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் உணவில் சேர்த்துகொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் தொற்று உண்டாகும் கிருமிகளை அழித்து நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு, நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.

ஆண்மை குறைபாடு பிரச்சனை சமீப காலமாக அதிகரித்துவருகிறது. ஆண்களுக்கு உடல் பலத்தை அதிகரிக்கவும், ஆண்மை குறைபாடு பிரச்சனையை போக்கவும் மாப்பிள்ளை சம்பா அரிசி உதவுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் வளமான அளவில் நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு, நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.