கருப்பு உளுந்தில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது....?
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புசத்து மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் பரவலாக உள்ளன.
கருப்பு உளுந்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள தாதுக்கள் எலும்புகள், மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரி செய்ய நார்ச்சத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதனால் இரத்தத்தில் இன்சுலின் மற்றும் குளுக்கோஸின் அளவை சமப்படுத்த முடியும். இதனால் உடலின் சர்க்கரை அளவை சரியான அளவில் வைக்க உதவுகிறது.
கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நார்ச்சத்து கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்துவதற்கும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதற்கும் உதவுகிறது.
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கருப்பு உளுந்து சாப்பிட்டால் இதில் இருக்கும் சத்து முழுவதும் ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. கருப்பு உளுந்தில் காணப்படும் நார்ச்சத்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகிறது.
சருமம் சம்பந்தமான பிரச்சனைகளைப் போக்க கருப்பு உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம். வெயிலின் தாக்கத்தை தணிக்கவும், முகப்பரு அறிகுறிகளைக் குறைக்கவும் கருப்பு உளுந்தை அடிக்கடி சாப்பிடலாம்.
பொட்டாசியம் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் பதற்றத்தைக் குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, கருப்பு உளுந்து சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.