1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (10:33 IST)

கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?

கொய்யா பழம் நம் உடலின் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க உதவி செய்கிறது. ஏனென்றால் கொய்யாப் பழத்தில் பொட்டாசியம் என்ற முக்கியமான சத்து இருக்கிறது.


கொய்யாப்பழம் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதை குறைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. என்று சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை மற்றும் பிற பழங்களுடன் ஒப்பிடும்போது  கொய்யாவில்  சர்க்கரை மிகக் குறைவு. சர்க்கரை அதிகப்படியான “வெற்று” கலோரிகளை சேர்க்கிறது, இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

கொய்யா பழம் ஒரு நல்ல அளவு வைட்டமின் ஏ கொண்டிருக்கிறது. வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு ஏற்படுவதை குறைக்கிறது. இது கண்பார்வை சிதைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல் கண்பார்வை மேம்படுத்துகிறது.

வெயில் காலங்களில் நாம் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. கொய்யா பழத்தில் நார்ச்சத்து உள்ளது. அதனால் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுக்கோளாறு வருவதையும் தவிர்க்க உதவுகிறது.

கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் ரத்தத்தில் நச்சுக்களை அனைத்தும் நீங்கி ரத்தம் சுத்தமாகிறது. ரத்ததின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.