1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:10 IST)

அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ள பப்பாளி !!

பப்பாளியில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற வைட்டமின்கள் மூலம் செல்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும்.


வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கு முக்கியமானது, மற்றும் பப்பாளி ஒரு சிறந்த மூலமாகும். பீட்டா கரோட்டின் என்பது வைட்டமின் ஏ வடிவமாகும், இது பழங்கள், காய்கறிகள் மற்றும் சில புரத உணவுகளில் நாம் உட்கொள்கிறோம்.

பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் சுருக்கம், நீங்கி முகத்தில் பளபளப்பு மற்றும் அழகு கூடும்.

பப்பாளிபழம்  சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்குவதில் சிறப்பாக செயல் படக்கூடியது. இது ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.

பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றின் கலவையானது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை வழங்குகிறது. அவை ஃப்ரீரேடிக்கல்களைக் குறைத்து ஒட்டுமொத்த புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது. பப்பாளியில் அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது. சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனுடைய  விளையும் மலிவானது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நிறம் கொண்டது. வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம்.

பப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ரத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.