புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (12:42 IST)

பலாத்காரம் செய்த பெண்ணை 8 மாதங்களுக்கு பின்னர் வந்து எரித்த அரக்கர்கள்...

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி தப்பித்த இளம்பெண் தீயிட்டு கொளுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த மார்ச் மாதம் 5 பேரால் கூட்டுபாலியல் பலத்காரத்திற்கு உள்ளான இளம் பெண் இது குறித்து காவல் நிலையத்தில் முன்னரே புகார் அளித்து இருந்துள்ளார். இந்நிலையொல் தற்போது இந்த பெண் வயல்வெளிக்கு சென்ற போது இவரை 5 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளனர். 
 
இந்த பெண்ணை தீயிட்டு கொளுத்தியது முன்னர் இவரை கூட்டுபலாத்காரம் செய்த அதே நபர்கள்தான் என்பதும் தெரியவந்துள்ளது. 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெணுக்கு தற்போது தீவிர சிகிச்சை லக்னோ மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது. 
 
போலீஸார் இந்த பெண்ணை தீயிட்டு கொளுத்திய 5 பேரில்  3 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். முன்னர், உன்னவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ 17 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, இது குறித்து புகார் அளித்த காரணத்திற்காக அந்த பெண்ணை தந்தையை கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர் அந்த பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.