வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (21:59 IST)

தோழியை வீட்டுக்கு அழைத்து வந்த இளம்பெண்: அதன் பின் ஏற்பட்ட பயங்கர விபரீதமும்

சென்னை நுங்கம்பாக்கத்தில் சேர்ந்த முனியம்மாள் என்ற இளம் பெண்ணுக்கு பிரியா என்ற தோழி நீண்ட காலமாக இருந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகி பல்வேறு விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உள்ளனர் 
 
இந்த நிலையில் ஒரு நாள் முனியம்மா தனது தோழியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தனது கணவரிடமும் அவர் அறிமுகம் செய்துள்ளார். இதனை அடுத்து பிரியா, முனியம்மாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதாக தெரிகிறது. சிலநேரம் முனியம்மாள் இல்லாத நேரமும் வந்ததாகவும் அதனால் பிரியாவுக்கும் முனியம்மாள் கணவருக்கும் நட்பு ஏற்பட்டு அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகவும் தெரிகிறது 
 
இதனை அடுத்து ஒரு நாள் தற்செயலாக கணவருடன் பிரியா கள்ளக்காதலில் ஈடுபட்டு இருப்பதை கண்டு பிடித்தபின் தோழியை இனிமேல் தன்னுடைய வீட்டிற்கு வர வேண்டாம் என்று கட் செய்துவிட்டார். அதுமட்டுமின்றி கணவரையும் கண்டித்து வைத்துள்ளார். இதன் பின் நிலைமை சுமுகமாக சென்று கொண்டிருந்தது 
 
தனது கள்ளக் காதலை கண்டு பிடித்து தனது காதலை கண்டித்த தோழியை பழிவாங்க முடிவு செய்த பிரியா, முனியம்மாள் மற்றும் அவருடைய கணவரும் நேற்று பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முனியம்மாள் கழுத்தில் கீறினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த முனியம்மாவை அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது முனியம்மாள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து முனியம்மாள் கணவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தோழியை தற்செயலாக ஒரே ஒரு நாள் வீட்டுக்கு கொண்டு வந்ததால் ஏற்பட்ட விளைவு கொலை முயற்சி வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது