ஞாயிறு, 30 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மார்ச் 2025 (11:07 IST)

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

Sengottaiyan

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் தேர்தல் குறித்து செயல்பாடுகளில் அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. முக்கியமாக அதிமுக கூட்டணி குறித்த நகர்வுகளை தொடங்கியுள்ள நிலையில் சமீபத்தில் எடப்பாடியின் டெல்லி சந்திப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை நீக்குவது, ஓபிஎஸ், தினகரனை கூட்டணியை விட்டு நீக்குவது போன்றவை. ஆனால் பாஜக மேலிடத்திற்கு இதில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.

 

இந்நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனுக்கு மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

 

இது பல்வேறு யூகங்கள் எழ காரணமாகிறது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளை ஏற்க முடியாததால் அதிமுகவின் தலைமையை மாற்ற பாஜக சீக்ரெட் மூவ் செய்து வருகிறதா என்ற ஐயத்தையும் இது அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.