அண்ணியுடன் கள்ள உறவு... இளைஞர் கொலை...இளம்பெண் போலீஸில் சரண் !

kudalore
sinoj kiyan| Last Modified திங்கள், 2 டிசம்பர் 2019 (17:38 IST)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இளைஞர் மணிகண்டன் கடந்த 26 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்த நிலையில், அவரது அண்ணன் மனைவி போலீஸில் சரணடைந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிகண்டனின் அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவரது மனைவி காசியம்மாளுக்கும், தம்பி மணிகண்டனுக்கும் தவறான உறவு இருந்ததாகத் தெரிகிறது.
 
இந்த சம்பவம் நடந்த தினத்தன்று, மணிகண்டனுக்கும், காசியம்மாளுக்கும் எதோ தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாகி உள்ளது.
 
இதில், கோபம் அடைந்த காசியம்மாள், தனது உறவினர் மகனான 17 வயது சிறுவனுடன் சேர்ந்து கொண்டு, மணிகண்டனை கொலை செய்ததை இன்று அவர் காவல் நிலையத்தில் ஒப்புக்கொண்டு சரணடைந்தார். 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :