திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (14:35 IST)

விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

delhi -farmers protes
விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட சில கோரிக்கைகள் பற்றி 2 நாட்களுக்குள் அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் நாளை மறுதினம் மீண்டும் டெல்லியை  நோக்கி பேரணி செல்வோம் என விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளிய வலியுறுத்தி  போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
 
டெல்லியை  நோக்கி விவசாயிகள் முன்னேறிவரும் நிலையில், சில எல்லைகளில் கான்கிரீட், இரும்பு தடுப்புகளை ஒன்றுசேர்த்து, அகற்றி டெல்லியை   நோக்கிச் சென்றனர்.
 
இந்த நிலையில், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
 
விரைவில் நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் போராடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில், இப்போராட்டத்தைக் கைவிடுமாறு விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 3 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை  தோல்வியடைந்தது.
 
இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்த நிலையில், விவசாய சங்கங்களுடன் நேற்று மத்திய அரசு  4ம் கட்ட பேச்சுவார்த்திய நடத்தியது. இதில், மத்திய அரசு சார்பில், அமைச்சர்காள் பியூஸ் கோயல்,அர்ஜூன் முண்டா, நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர்.
 
அதில், விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, பருத்தி, பருப்பு,சோளம் ஆகிய 3 விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் என அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இம்மூன்று விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வோம் என அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
 
இதுகுறித்து ஆலோசிக்கப்படும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தற்காலிகமாக  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
மேலும், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட சில கோரிக்கைகள் பற்றி 2 நாட்களுக்குள் அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் நாளை மறுதினம் மீண்டும் டெல்லியை  நோக்கி பேரணி செல்வோம் என விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.