திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (06:36 IST)

இன்று தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்! தேர்தலை முன்னிட்டு புதிய அறிவிப்புகளா?

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் இன்றைய பட்ஜெட்டில் தேர்தலை முன்னிட்டு புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் ஆக பொறுப்பேற்ற தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதை அடுத்து இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் பல புதிய நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 -25ஆம் தேதி ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார் என்பதும் அதேபோல் நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய பட்ஜெட்டில், நாளைய வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன புதிய அம்சங்கள் இருக்கும் என்பதை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva