பார்முலா 4 கார் ரேஸ் நடத்த அனுமதி.. ஆனால் அரசு செலவில் நடத்த கூடாது: நீதிமன்றம்
சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தாலும் அரசு செலவில் நடத்தக்கூடாது என்றும், அரசு அளித்த ரூ.42 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது என்பதும், சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை கார் பந்தயத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் இந்த போட்டிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும். அரசு அளித்த ரூ.42 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Edited by Mahendran