கிராமப்புறங்களிலும் காலை உணவு திட்டம்.. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை! – தமிழ்நாடு பட்ஜெட் 2024!
தமிழக அரசு 2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், கல்விக்கும் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்த ₹600 கோடி ஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்க நிதி ஒதுக்கீடு. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளின் கட்டமைப்பு, சுகாதார வசதிகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு
மதுரையை போல கோவையில் பிரம்மாண்டமான கலைஞர் நூலகம் அமைக்கப்படும். இது போட்டித்தேர்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ₹13,720 கோடி நிதி ஒதுக்கீடு
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ₹26 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ₹1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு
தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு
நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K