1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (19:31 IST)

இந்தியா வரும் டிரம்ப்புக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட்..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வரவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு சிறப்பு பரிசாக காந்தியின் சுயசரிதை வழங்கப்படவுள்ளது.

வருகிற 24 ஆம் தேதி இந்தியாவிற்கு தனது மனைவி மெலனியாவுடன் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிறார். இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியா வரும் டிரம்ப் அகமதாபாத், ஆக்ரா ஆகிய நகரங்களை சுற்றிப்பார்க்கிறார். குறிப்பாக அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார். இந்நிலையில் ஆசிரம நிர்வாகிகள் சார்பாக அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.

அதன் படி, மகாத்மா காந்தியின் சுயசரிதையான “MY life, My message” என்ற நூலும், கதர் ஆடை தயாரிக்கும் ராட்டினமும் டிரம்ப மற்றும் அவரது மனைவி மெலனியாவிற்கும் பரிசாக வழங்கப்படுகிறது.