1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (15:55 IST)

டிரம்ப் வருகைக்காக ரூ. 80 கோடி செலவிடுவது குறித்து கே.ஸ். அழகிரி விமர்சனம் !

டிரம்ப் வருகைக்காக ரூ. 80 கோடி செலவிடுவது குறித்து கே.ஸ். அழகிரி விமர்சனம் !
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்காக அகமதாபாத்தில்  ரூ. 80 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டிருப்பது வேடிக்கையானது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
 
அவருக்கு கோலாகலமான வரவேற்பு கொடுக்கவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதற்காக இந்திய அரசு தீவிரமான முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.         
   
அகமதாபாத் நகரை அலகுபடுத்துவதற்காக  50 ஆண்டுகளாக அப்பகுதியில்  வாழ்ந்து வரும் மக்களை 7 நாட்களில் நகராட்சி நிர்வாகம் வெளியேற்ற சேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
வெளியேற்றப்பட்டவர்களுக்கு மறுகுடியிறுப்பு உத்தரவாதம் கொடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள்  விமர்சனம் செய்து அரசின் பார்வைக்கு வெளியேற்ற வேண்டும் இல்லையெனில் அனைவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிரம்ப் வருகைக்காக ரூ. 80 கோடி செலவிடுவது குறித்து கே.ஸ். அழகிரி விமர்சனம் !
அகமதாபாத் நகரை அழகுபடுத்துவதற்கு ரூ.80 கோடி செலவிட செய்யப்பட்டிருக்கிறது. டிரம்புக்கு வரவேற்பு கொடுக்க அகமதாபாத்தில் புதிதாக அரங்கம் கட்டப்பட்டு அங்கே தான் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.