வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (15:51 IST)

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு..

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான அதிகாரத்தை மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, ஆதார் எண்ணை இணைக்க தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரத்தை மத்திய அரசு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதல் பெறுவதற்கு சட்டத்துறை தீவிரமாக உள்ளது.