வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2019 (11:24 IST)

ராகுல் தோற்றால் அரசியலில் இருந்து விலகத்தயார் – சித்து சவால் !

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வி அடைந்தால் தான் அரசியலில் இருந்து விலகத்தயார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்து கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்து பிஹாரின் கத்தியார் மாவட்டத்தில்  ஏப்ரல் 16 ஆம் தேதி சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முஸ்லிம்கள் உள்ள அந்த பகுதியில் பிரச்சாரத்தின் போது பேசிய சித்து ‘ பாஜக உங்களை மதரீதியாக ஒடுக்குகிறது. இங்கு நீங்கள் 65 சதவீதம் பேர் இருக்கிரீர்கள். ஆகவே நீங்களே பெரும்பாண்மை. நீங்கள் சேர்ந்து வாக்கு அளித்தால் மோடியை விரட்டலாம், ஆகவே பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்’ எனப் பேசினார். இதனால் சித்து மீது விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து சித்து மீதானப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் ‘ சித்து பேசிய வார்த்தைகள் கண்டனத்துக்குரியவை. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானவை. அதனால் 3 நாட்கள் சித்து எந்தவிதமான அரசியல் நிகழ்ச்சிகள், நேர்காணல்கள், பொதுமக்களிடம் பேசுவது’ ஆகியவற்றை மேற்கொள்ளத் தடை விதித்தது.
இதையடுத்து இப்போது மீண்டும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி தோற்கடிக்கப்படுவார் எனும் பாஜகவின் பிரச்சாரத்துக்குப் பதிலளித்துள்ள அவர் ‘ அமேதியில் ராகுல் தோல்வியுற்றால் நான் அரசியலை விட்டே விலகத் தயார்’ என சவால் விடுத்துள்ளார்.