மம்தாவுக்கு ஓட்டு போடலயா நீ? மனைவி வாயில் ஆசிட் ஊற்றிய கணவன்
மம்தா பேனர்ஜியின் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடாத காரணத்தால், மனைவியை அடித்து அவரது வாயில் ஆசிட் ஊற்றிய கணவரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடத்தி வருகிறது. சமீபத்தில் அதாவது ஏப்ரல் 11ஆம் தேதி அங்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மம்தா கட்சியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் தேர்தலுக்கு முன்பிருந்தே தன் மனைவிடம் மம்தாவின் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட வேண்டும் என கூறிவந்துள்ளார். ஆனால், இதை அவரது மனைவி ஏற்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்தவர் ஓட்டு போட்டு வந்ததும் அவரது மனைவிட்யை அடித்து துன்புறுத்தி வாயில் ஆசிட் ஊற்றியுள்ளார். இதனால், அந்த பெண்ணிற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பெண்ணின் மகன் போலீஸில் புகார் அளித்துள்ளான்.
அந்த புகாரில், ஓட்டுபோட்டு வந்தவுடனேயே எனது குடும்பத்தினர் எனது தாயை துன்புறுத்த ஆரம்பித்துவிட்டனர். என் தந்தை தாயின் தலைமுடியை பிடித்து இழுத்துச்சென்று அடித்து, வாயில் ஆசிட் ஊற்றினார் என தெரிவித்துள்ளான். போலீஸார் இதனை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.