புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2019 (16:22 IST)

3 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.9000 அபராதம் செலுத்திய பாட்டா நிறுவனம்

வாடிக்கையாளர்கள் இல்லையெனில் எந்த பொருளும் விநியோகிக்க முடியாது. காந்தியடிகள் பொருள்விற்பனைக் கூடங்களுக்கு  வாடிக்கையாளர்களே முக்கியஸ்தர்கள் என்று கூறியுள்ளார். அனால் கண்ணதாசன் சொன்னது போல் அவசரமான உலகத்தில் வாடிக்கையாளர்கள் மீது பணச்சுமை தான் அதிகமாகி வருகிறது.
தற்பொது நெகிழியை உபயோகிக்கக்கூடாது என்ற சட்டம்  என்று நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் போது கடையில் காகிதப் பையிற்கு குறிப்பிட்ட தொகையை வசூழ் செய்கின்றனர். 
 
இதுபோல் சண்டிகர் மாநிலத்தில் வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள பாட்டா கடையில்  ஷூ ஒன்றை வாங்கியுள்ளார்.  பிறகு அதற்குரிய பணத்தை செலுத்திய பின்னர் அத்துடன் பொருளை வைப்பதற்காக கேரி பையிற்கும் சேர்த்து ரூ. 3 வசூலித்துள்ளனர்.
 
இதனையடுத்து 402 ஷூக்கான பணத்துடன், ரூ. கேரி பையிற்கு சேர்ந்து வசூலித்ததற்காக வாடிக்கையாளர் நுகர்வோர் கோர்ட்டில் அவர் வழக்குத் தொடுத்தார்.
 
இதற்க்கான தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளதாவது :
 
வாடிக்கையாளர்  உங்கள் கடையில் உங்கள் நிறுனத்தின் பொருளை வாங்கினால் அதற்கு நீங்களேதான் கேரி பையை வழங்க வேண்டும். சுற்றுசூழலுக்கு உகந்த மாற்று ஏற்பாடுகளையும் நீங்கள்தான் செய்ய வேண்டும். என்று கூறி பாட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
மேலும் இதுசம்பந்தமாக வாடிக்கையாளருக்கு  கேரி பையிற்கு ரூ. 3 வழக்கு செலவு ரூ.1000 நஷ்டத்திற்காக தொகை ரு.3000 உடனே அபராதமாக செலுத்தமாறு தெரிவித்துள்ளது.