கோடீஸ்வரர்களுக்கு பணம் தர மாட்டோம்! ஏழைகளுக்கு தருவோம் - ராகுல் காந்தி

rakulgandhi
Last Modified வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (18:10 IST)
வரும் தேர்தலுக்கு அனைத்துக் கட்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகத்துக்கு வந்து தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு வருகின்றனர்.
தற்போதைய பரப்புரையில் ராகுல் காந்தி கூறியதாவது :
 
மோடிக்கு தமிழக வரலாறு தெரியாது. அவருக்கு பெரியாரின் புத்தகத்தை அளிக்க விரும்புகிறேன்.
 
மோடியின் வெறுப்பு அரசியலை நான் நட்பான, அன்பான அரசியலை கொண்டு எதிர்கொள்ளப்போகிறோம்.
 
நாட்டில் உள்ள 20 % ஏழை எளிய மக்களுக்கு  எங்களால் ரூ.72 000 கொடுக்கப்படும். தேர்தல் அறிக்கையில் தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள், இளைஞர்களின் குரல் ஒலிக்கும்.
 
ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் துறைகள் முடங்கியது.யாரும் தமிழகத்தின் மீது எதையும் திணிக்க முடியாது.  
 
நீட்தேர்வு வேண்டாமா ?  இல்லையா என்பதை தமிழக மக்களே முடிவு செய்துகொள்ளலாம்.
 
மன பிறழ்ச்சி கொண்ட ஒருவரின் மனதில் குரல் போன்றது அல்ல காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.மக்களிடம் இத்தேர்தல் அறிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது.இதுஒட்டுமொத்த தேசத்தின் குரல்.
rakul
கோடீஸ்வரர்களுக்கு பணம் தர மாட்டோம், மாறாக நாட்டில் உள்ள ஏழைகளுக்கு  வழங்குவோம். நான் பொய் சொல்வதற்காக இங்கு வரவில்லை.  எங்களால் நியாய் திட்டத்தை நிறைவேற்ற முடியும்..இவ்வாறு அவர் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :