வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (18:23 IST)

’பெரியார், கருணாநிதி புத்தகத்தை’ மோடிக்கு பரிசளிக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி

வரும் தேர்தலுக்கு அனைத்துக் கட்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகத்துக்கு வந்து தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டு வருகின்றனர்.
தனது பரப்புரையில்  ராகுல் காந்தி  கூறியதாவது :
 
''மோடிக்கு தமிழகத்தின்  வரலாறு தெரியாது. அவருக்கு பெரியாரின் புத்தகத்தையும் , கருணாநிதியின் புத்தகத்தையும் பரிசாக அளிக்க விரும்புகிறேன். தேர்தல் அறிக்கையில் இருக்கும் புரட்சிகரமான அம்சம் நியாய் என்ற திட்டம்தான்.'' இவ்வாறு அவர் பேசினார்.