தேர்தல் செலவுக்கு பணமில்லாமல் அல்லாடும் தேமுதிக? கண்டுக்கொள்ளாத தலைமை

Last Updated: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (18:52 IST)
தேர்தலுக்கு செலவு செய்ய பணமில்லாமல் தேமுதிக வேட்பாளர்கள் அல்லடுகிறார்கள். ஆனால், தேமுதிக தலைமை இதை எதையும் பெரிதாக கண்டுக்கொண்டுக்கொள்வதாய் இல்லை என கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். 
 
சிவகாசி லோக்சபா தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், மமமுக சார்பில் பரமசிவ அய்யப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 
 
இந்த தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருந்தாலும், தேமுதிக வேட்பாளுக்கு எதிராக ஒரு சில அதிமுக முக்கிய புள்ளிகள் உள்ளடி வேலை செய்து வருகிறார்களாம். இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் தனது சொந்த கைக்காசை போட்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறாராம். 
 
இது இப்படி இருக்க தேமுதிக வேட்பாளர் தேர்தல் செலவுக்கு பணமின்றி அல்லாடி வருகிறாராம். அதாவது பூத் கமிட்டிக்கு பணம் கொடுக்க கூட அவரிடம் பணம் இல்லையாம். இவரது கட்சி தலைமை இதை பற்றி கண்டுக்கொள்ளவில்லையாம். 


இதில் மேலும் படிக்கவும் :