திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (19:06 IST)

கார்த்திக் சிதம்பரத்தை கண்டுகொள்ளாத ராகுல் காந்தி: தமிழக காங்கிரஸில் பரபரப்பு..!

எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி இன்று பாராளுமன்றத்திற்கு வந்தபோது அவர் காங்கிரஸ் பிரமுகர்கள் பலருடைய கையை குலுக்கி நடந்து சென்றார்
 
அப்போது கார்த்திக் சிதம்பரம் எதிரே வந்த போது ராகுல் காந்தியின் கையை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி அவரை கண்டுகொள்ளாமல் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் ஆகியவர்கள் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதையே இது காட்டுகிறது என்று கூறப்படுவதால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே ப சிதம்பரம் மீது ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ப சிதம்பரத்திற்கு வாய்ப்பு கொடுப்பது கஷ்டம்தான் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva