செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (12:55 IST)

ராகுலின் வயநாடு தொகுதிக்கு இன்று தேர்தல் அறிவிப்பா?

Election Commission
வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இன்று அந்த தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற காலியாக உள்ள தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
அந்த வகையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் காரணமாக வயநாடு தொகுதி காலியாக இருக்கும் நிலையில் அந்த தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி பதிவு செய்துள்ள வழக்கு இன்னும் விசாரணைக்கு வராததால் தேர்தல் தேதி அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva