ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (16:20 IST)

அந்தமான் சிறையில் ஒருநாள் ராகுல் காந்தியால் இருக்க முடியுமா? முதல்வர் ஆவேச கேள்வி..!

அந்தமான் சிறையில் ஒரே ஒரு நாள் ராகுல் காந்தியால் கைதியாக இருக்க முடியுமா என மகாராஷ்டிரா மாநிலம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் அல்ல என்றும் காந்தி என்றும் தெரிவித்திருந்தார்
 
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு ஆளுங்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியினர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மகராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காட்டமாக கேள்வி எழுப்பினார். 
 
வீர சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி அவதூறாக பேசியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவர் சாவர்க்கரை இழிவுபடுத்தியது நாட்டு மக்களை இழிவு படுத்துவதற்கு சமம் என்று கூறினார் 
 
ராகுல் காந்தி அந்தமான் சிறையில் ஒரே ஒரு நாள் இருந்து பார்க்கட்டும் என்றும் அவர் காட்டமாக தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
Edited by Mahendran