திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (16:07 IST)

தகுதி இழப்பிற்கு பின் முதல்முறையாக நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி: என்ன காரணம்?

ராகுல் காந்தியின் எம்.பி பதவி சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் அவர் முதல்முறையாக சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ராகுல் காந்தி மீது கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலாளராக அறிவித்தார். இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் சற்றுமுன் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். 
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக சில குறிப்புகளை தெரிந்து கொள்வதற்காக அவர் மக்களவை செயலாளரை சந்திப்பதற்காக நாடாளுமன்றம் வந்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran