1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (15:43 IST)

காங்கிரஸ் கட்சி சார்பில் தீபந்த பேரணி- மல்லிகார்ஜூன கார்கே தகவல்

ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவரகாரத்தில்., இன்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில், தீபந்த பேரணி நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார். இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக, ராகுல் காந்தி எம்பி தகுதி  நீக்கம் செய்வதாக பாஜக அறிவிவித்தது.

இந்த அறிவிப்பு காங்கிரஸ்  மற்றும்  அதன் கூட்டணி கட்சிகள், வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிக்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குரலெழுப்பியும், அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து, இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அமளி  செய்ததால், நாள் முழுவதும்  இரண்டு அவைககளும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில், தீபந்த பேரணி நடத்தவுள்ளதாக கூறியுள்ளது.

இந்த தீபந்த பேரணி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூர்ன கார்க்கே தலைமையில் நடக்கவுள்ளது. இதில், அக்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனனர்.

தீபந்த பேரணியில், காங்கிரஸின் கூட்டணி  கட்சிகளாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொள்வது பற்றி எதுவும் தெரிக்கவில்லை.