திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (09:29 IST)

கள்ளக்காதலால் கர்ப்பம்.. கள்ளக்காதலியை கொன்று குழந்தை தூக்கி வீசிய கொடூர நபர்!

பெங்களூரில் திருமணமான இருவருக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் குழந்தை பிறந்ததால், கள்ளக்காதலியை கொன்று எரித்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் தொட்டகுனி கிராமத்தை சேர்ந்தவர் ருக்சனா என்ற பெண். சமீபத்தில் இவர் அப்பகுதியில் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அப்பகுதியில் 2 மாத குழந்தை ஒன்றும் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்ததில் அப்பகுதியை சேர்ந்த ப்ரதீப் என்பவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அப்போது அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது.

ப்ரதீப் வேறு பெண்ணுடன் திருமணமானவர். ருக்சனாவும் வேறு ஆணுடன் திருமணமானவர். ஆனால் இருவருக்கும் இடையே ரகசியக்காதல் எழுந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் விளைவாக ருக்சனா கர்ப்பமாகியுள்ளார். அதை ப்ரதீப்பிடம் சொல்ல அவரோ அதை ஏற்றுக் கொள்ளாமல் சண்டை போட்டுள்ளார். ருக்சனா கர்ப்பமான நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்துள்ளார்.


அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளும்படி ருக்சனா ப்ரதீப்பை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ருக்சனாவை தனியே அழைத்து சென்ற ப்ரதீப் அவரை கொன்று பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு, குழந்தையை புதரில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார். நல்வாய்ப்பாக குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K