சாணக்கியனை கைக்குள் போட்ட கெஜ்ரிவால்: சுதாரிக்குமா பாஜக?
ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளை தேர்தலில் ஜெயிக்க வைப்பதில் இந்தியாவிலேயே பிரசாந்த் கிஷோர்தான் ஃபேமஸ். குஜராத் மாநில தேர்தலில் மோடி வெற்றி பெற்றதில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றது வரை வெற்றிகளில் இவரது பங்கு அதிகம்.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சியை தக்கவைப்பதில் பாரதீய ஜனதாவுடன் கடும் போட்டியை சந்திக்க நேரிடும் என்பதால், ஆம் ஆத்மி கட்சி பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடி உள்ளது. இதனை அவர் ஏற்றிக்கொண்டதாகவும் தெரிகிறது.
ஏனெனில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் திமுகவுக்காக தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர்தான் வழங்கி வருகிறார் என கூறப்படுகிறது. நேற்று திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற குடியுரிமை சீர்திருத்த சட்ட மசோதாவின் நகல் எரிப்புப் போராட்டமும் பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாதான் என கூறப்படுகிறது.