திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (11:48 IST)

தூக்கிலிட கொலையாளி தயார்.. இனியும் நிர்பாயா வழக்கில் தாமதிக்குமா அரசு?

நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார் என்று உத்திரபிரதேச மாநிலம் மீரட் சிறை கொலையாளி தெரிவித்துள்ளார். 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
 
அவர்களில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான  ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மற்ற நால்வருக்குமான தூக்குதண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள திஹார் ஜெயிலில் தூக்குபோடுவதற்கு ஹேங்க் மேன் இல்லாததால் இரு ஹேங்க்மேன்களை கேட்டு நிர்வாகம் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதற்காக இரு ஹேங்க்மேன்களை அனுப்ப தயாராக வைத்துள்ளது அரசு. மேலும் தூக்குமாட்ட கயிறுகளை புதிதாக தயாரிக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட நான் தயார் என்று உத்திரபிரதேச மாநிலம் மீரட் சிறையில் கொலையாளி பணி செய்யும் பவன் ஜலாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது... 
 
மீரட் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கினால் நிர்பயா குற்றாவாளிகளை தூக்கிலிட நான் தயாராக உள்ளேன். எனது தாத்தாவும், ஏற்கனவே அப்பாவும் சிறைக்கொலையாளிகளாக வேலை செய்துள்ளனர் என தெரிவித்தார்.
 
எனவே விரைவில் குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடபடுவார்களா அல்லது மத்திய அரசு இன்னும் காலம் தாழ்த்துமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும்.