புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (07:57 IST)

ஜூம் செயலி தடை செய்யப்படுமா? மக்களவையில் கேள்வி

ஜூம் செயலி தடை செய்யப்படுமா? மக்களவையில் கேள்வி
ஊரடங்கு நேரத்தில் தகவல் பரிமாறி கொள்ள உதவும் ஜூம் செயலி பாதுகாப்பு அற்றது என்று பல நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இந்தியாவில் ஜூம் செயலி தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. சமீபத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் ஜூம் செயலி மூலம் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் செயலி தடை செய்யப்படுமா என்ற மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜூம் செயலியை தடைசெய்யும் எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
மக்களவையில் ஆந்திர எம்.பி கனுமுரு ரகுராமராஜூ என்பவர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார். தீவிரமான பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசுக்கு ஜூம் செயலியை தடைசெய்யும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே ஜூம்செயலியை தடை செய்வதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்றார்
 
மேலும் ஜூம் உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் செயலிகளை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.