1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2020 (17:45 IST)

ரயில்வே துறையை தனியார் மயமாக்க திட்டமா? மக்களவையில் அமைச்சர் பதில்

ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாக குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கேற்றார் போல் ஒரு சில நிறுவனங்கள் ரயில்வே துறையில் உள்ள ஒரு சில பணிகளின் ஒப்பந்தங்களை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து இன்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயல், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறினார் 
 
ஆனால் அதே நேரத்தில் ரயில்வே துறையை விரிவாக்கம் செய்யவும் நவீனமயமாக்கவும் ரூபாய் 50 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் கூறினாலும் ரயில்வே துறையில் உள்ள சில பகுதிகளை மட்டும் தனியார் மயமாக்க மத்திய அரசு ரகசியமாக திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்