செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (17:12 IST)

ஜூம் செயலியைக் கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்கவேண்டும்! உதய் பேச்சால் பரபரப்பு!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஜூம் செயலி காரர்கள் ராயல்டி கொடுக்கவேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்குக்குப் பின் பெரும்பாலான மீட்டிங்குகள் ஜூம் செயலி மூலமாகவே நடக்கின்றன. இந்நிலையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டமும் ஜூம் செயலியில் நடந்தது. அதில் புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அந்த நிகழ்வில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பதவியேற்றவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறிக்கொண்ட அவர் , ’ஜும் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி தரவேண்டும். ஏனெனில் பொதுக்குழு கூட்டத்தையே அவர் ஜூம் செயலியில் நடத்தியுள்ளார்’ எனக் கூறினார்.