புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (15:25 IST)

சீன மொழியில் பேசி ஓட்டு கேட்கும் முதல்வர்

மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஒருசில இடங்களில் சீன மொழி, தெலுங்கு மொழி ஆகியவற்றில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தங்காரா என்ற மக்களவை தொகுதி 'சீனா டவுன்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு சீனமொழி பேசும் 2300 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு பிரச்சாரத்திற்கு வரும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட திரிணாமல் காங்கிரஸ் கட்சியினர் சீனமொழியில் பேசி வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்
 
அதேபோல் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியான ஜார்கிராம் மற்றும் கராக்பூர் ஆகிய தொகுதிகளில் மம்தா கட்சியினர் தெலுங்கில் பேசி ஓட்டு கேட்கின்றனர். மேலும்  பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மேற்கு மிட்னாபூர் தொகுதியில்  52 சதவீதம் சந்தாலி மொழி பேசும் அல்சிசி இனத்தவர்கள் உள்ளனர். இங்குள்ள சுவர்களில் சந்தாலி மொழியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த தேர்தல்களில் இம்மாநிலத்தில் பெங்காலி மட்டுமின்றி உருதும் இந்தி மொழிகளில் மட்டுமே சுவர் பிரசார விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில்  தற்போது தெலுங்கு, சந்தாலி (அல்சிசி) மற்றும் சீன மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.