மீண்டும் லேடியா? மோடியா? கோஷம்! இந்த முறை லேடி யார் தெரியுமா?

modi
Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (07:40 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே மோடியா? லேடியா? என்ற கேள்வி எழுந்து அதில் மோடி அலையை லேடி அலை துவம்சம் செய்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37ல் அதிமுக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த தேர்தலில் ஜெயலலிதா இல்லாததால் அந்த கோஷம் தமிழகத்தில் இல்லை. மேலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் அந்த கோஷத்திற்கு வேலையில்லாமல் போய்விட்டது. ஆனால் மோடியா? லேடியா? என்ற கோஷம் தற்போது மேற்குவங்கத்தில் ஒலிக்கின்றது. மேற்குவங்கத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு பிரதமர் மோடியும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக மம்தா பானர்ஜி அனல் பறக்கும் பிரச்சாரத்தை செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் மோடியா? லேடியா? என்ற கோஷம் எதிரொலித்து வருகின்றது. கடந்த தேர்தலில்
தமிழகத்தில் ஜெயலலிதா பெற்ற மிகப்பெரிய வெற்றியை இந்த முறை மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்இதில் மேலும் படிக்கவும் :