புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (07:59 IST)

மத்திய அமைச்சருக்கு எதிராக நடிகையை வேட்பாளராக்கிய மம்தா பானர்ஜி!

வரும் பாராளுமன்ற தேர்தலில் பெண்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் வேட்பாளர்களாக அதிகம் தேர்வு செய்திருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 42 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.
 
இந்த வேட்பாளர் பட்டியலில் நடிகர்கள் நஸ்ரத் ஜஹான், மிமி சக்கரவர்த்தி,  மூத்த நடிகை மூன்மூன் சென், நடிகர் தேவ் ஆகிய சினிமா நட்சத்திரங்கள் போட்டியிடுகின்றனர். மூத்த நடிகை மூன்மூன் சென், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு எதிராக போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது
 
தனக்கு எதிராக ஒரு நடிகையை மம்தா பானர்ஜி நிறுத்தி இருப்பது குறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ கூறியபோது, 'எப்போதுமே எனக்கு எதிராக நடிகையை வேட்பாளராக நிறுத்துகின்றனர். இருப்பினும் எனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, 'நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றாலும் தேர்தலுக்கு பின் தங்கள் கட்சியின் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும்' என்றும் வேட்பாளர் பட்டியலில் 40% பெண்களாக அறிவித்திருப்பது தனக்கு பெருமை தருவதாகவும் அவர் தெரிவித்தார்.