புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 31 மே 2019 (18:17 IST)

’அது நீங்கனுமா ? இதை செய்யுங்க... ’ எதிர்க்கட்சிகளை கிண்டலடித்த பாபா ராம்தேவ்!

நாட்டில் இரண்டாவது முறை பிரதமராக மோடி நேற்று பதவியேற்றார். அவருடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுகிறவர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா மேற்கொள்ள வேண்டும் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
இன்று மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுவர்களுக்கு உரிய இலாக ஒதுக்கப்பட்டது.இதில் அமித் ஷா, பியூஸ் கோயல், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர்  அமைச்சர்களாக பொறுப்பேற்று மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய அடுத்த  5 ஆண்டுகாலம் கடுமையாக உழைபார்கள் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
 
மேலும், எதிர்க்கட்சிகள் ( காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ) அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்காவது Kapalabhati’, ‘Anulom Vilom’ போன்ற பிராணாயாமங்களை மேற்கொள்ள வேண்டும், அப்படி செய்தால்தான் அவர்களின் மன அழுத்தம் நீங்கும்  என்று எதிர்க்கட்சிகளை கிண்டலடிக்கும் விதத்தில் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளிலும், காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.