புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 மே 2019 (11:15 IST)

மகனுடன் டெல்லியில் டேரா போட்ட ஓபிஎஸ்: அடுத்த மூவ் என்ன?

மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என நினைத்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. 

 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ்க மாபெரும் வெற்றி பெற்றும் தனிப்பெரும்பான்மையுடன் நேற்று ஆட்சி அமைத்தது. நேற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற மோடியுடன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோரும் பதவியேற்றனர். 
 
தமிழகத்தை பொருத்த வரை மக்களவை தேர்தலில் அதுவும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேனி மக்களவை தொகுதி ஆகும். எனவே, ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்துவிட வேண்டும் என ஓபிஎஸ் பல டெல்லி பயணங்களை மேற்கொண்டார்.
ஆனால், அவை அனைத்தும் வீணாய் போய்விட்டது. ஆம், ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் பதவியேற்பு நடந்து முடிந்தவுடன் முதலமைச்சர் பழனிசாமி, தம்பிதுரை உள்ளிட்டோர் சென்னை திரும்பினர். 
 
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர், அங்கேயே தங்கியுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது மகனுக்கு எப்படியும் அமைச்சர் பதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டமிட்டு அங்குள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.