வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (19:58 IST)

பிரதமராக மோடி பதவியேற்பு : அவரது’ தாய் ’நெகிழ்ச்சி...

இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டனர். 
நம் நாட்டின் குடியரசு தலைவர் மற்றும் முதல்குடிமகனான  ராம் நாத் கோவிந்த் மேடையில் நின்று அழைக்க ..கெம்பீரமாக நடந்துவந்த மோடி மைக்கின் முன்னால் நின்றுகொண்டு இந்தியப்பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அங்கு எட்டுத்திக்கும் அமர்ந்திருந்த ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கூச்சலிட்டு கரகோஷம் எழுப்பினர்.
 
தற்போதுடெல்லியில் நடைபெறவுள்ள மோடியில் பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
 
 முன்னதாக தற்பொழுது புதிய அமைச்சர்களாக பதவியேற்கப்போகிற எம்.பிக்களுக்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தேனீர் விருந்து நடைபெற்றது. இதில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 
 
இப்போது மோடியின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து குடியரசு தலைவர் பதவிபிரமாணம் செய்துவைக்க பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில் பாரதத்தின் 2வது முறையாக  பிரதமராக மோடி பதவியேற்க்கும் காட்சியை அவரது தாய் ஹீராபென் வீட்டிலிருந்தபடியே பார்த்து மகிழ்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
மோடிதன் தாயின் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். ஓவ்வொருமுறை தான் புதிய செயலை செய்யும்ம் போதும் தன் தாயிடம் ஆசிர்வாதம் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
 
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து தன் தாயிடம் சென்று மோடி ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.