ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2022 (14:07 IST)

மதம் மாறினால் பட்டியல் ஜாதி செல்லாது: தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர்

arun haldar
மதம் மாறினால் பட்டியல் ஜாதி செல்லாது: தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர்
பட்டியல் ஜாதியினர் மதம் மாறினால் பட்டியல் வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவில் பட்டியல் ஜாதியினர் பலர் மதம் மாறி வருகின்றனர் என்றும் அவ்வாறு மதம் மாறிய பின்னரும் பட்டியல் வகுப்பினருக்கான சலுகைகளை அனுபவித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் பட்டியல் சாதியினர் மதம் மாறிய பின்னரும் அவருக்கு பட்டியல் வகுப்பினர் என ஜாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார் என்பவர் தெரிவித்துள்ளார் அவரது அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது