திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:28 IST)

ஐசிசி தரவரிசைப் பட்டியல்- இந்திய அணி 3 வது இடம்!

england - india
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி  ஒரு நாள் போட்டியில் 3 வது இடம் பிடித்துள்ளது..

சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான ஒரு நாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி அமைப்பு இன்று வெளியிட்டுள்ளது.

அதில்,    நியூசிலாந்து அணி 124 ரேட்டிங் புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இங்கிலாந்து 11 ரேட்டிங் புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இதன் மூலம் 111 ரேட்டிங் புள்ளிகள் பெற்று ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் 3 வது இடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தான் அணி 107 ரேட்டிங் புள்ளிகள் பெற்று 4 வது இடத்திலும் உள்ளது. அடுத்து ஆஸ்திரேலியா -101, தென்னாப்பிரிக்கா-101,  பங்களாதேசஷ்-92, இலங்கை-92, வெஸ்ட் இண்டீஸ் -71, ஆப்கானிஸ்தான்-69  இடங்களைப் பெற்றுள்ளன.