வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:24 IST)

2009 முதல் 6 ஆண்டுகளுக்கும் மொத்தமாக விருது விழா! – விருதுகளின் முழு விவரம்!

TN assembly
2009ம் ஆண்டு முதல் 2014 வரை 6 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு திரைப்பட விருதுகளுக்கான திரைப்பட கலைஞர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட விருதுகளுக்கான திரை கலைஞர்கள், திரைப்படங்களின் விவரங்கள் ஆண்டு வாரியாக..

சிறந்த இயக்குனர்கள்

2009 - வசந்தபாலன் (அங்காடித் தெரு), 2010- பிரபு சாலமன் (மைனா), 2011- ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்), 2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9), 2013- ராம் (தங்கமீன்கள்), 2014- ராகவன் (மஞ்சப்பை)

சிறந்த நடிகர்கள்

2009 - கரண் (மலையன்), 2010 - விக்ரம் (ராவணன்), 2011 - விமல் (வாகை சூடவா), 2012 - ஜீவா (நீதானே என் பொன் வசந்தம்), 2013 -ஆர்யா (ராஜா ராணி), 2014 - சித்தார்த் (காவியத் தலைவன்)

சிறந்த நடிகைகள்

2009 – பத்மப்ரியா (பொக்கிஷம்), 2010 – அமலா பால் (மைனா), 2011 – இனியா (வாகை சூடவா), 2012 – லெட்சுமி மேனன் (கும்கி), 2013 – நயன்தாரா (ராஜா ராணி), 2014 – ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)

சிறந்த திரைப்படங்கள்

2009 – பசங்க, 2010 – மைனா, 2011- வாகை சூடவா, 2012 – வழக்கு எண் 18, 2013 – ராமானுஜன், 2014 – குற்றம் கடிதல்

சிறந்த இசையமைப்பாளர்

2009 – சுந்தர் சி பாபு, 2010 – யுவன் சங்கர் ராஜா, 2011- ஹாரிஸ் ஜெயராஜ், 2012 – டி.இமான், 2013 – ரமேஷ் விநாயகம், 2014 – ஏ.ஆர்.ரஹ்மான்