வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (07:48 IST)

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியல்: டெல்லி முதலிடம்!

Women
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் நாட்டின் தலைநகர் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின்படி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஒரு ஆண்டில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது
 
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் மும்பையும் மூன்றாவது இடத்தில் பெங்களூரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது