பாட்டு, டான்ஸுனு ஓரே லூட்டி: தமிழிசையின் அட்ராசிட்டிய பாரூங்க...
தெலங்கானா ஆளுநர் தமிழிசை, அம்மாநில பழங்குடி மக்களுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்து சக அரசியல்வாதிகளாலும் நெட்டிசன்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், கலாய்க்கப்பட்டும் இருந்த தமிழிசை தனக்கு நேர்ந்த விமர்சனங்களை பொறுமையாக சந்தித்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசாக சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக குடியரசு தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
தெலங்கானா ஆளுநரானதும் தெலுங்கு கற்றுக்கொண்ட தமிழிசை அம்மாநில மக்களுடன் சகஜமாக பழகி வருகிறார். இந்நிலையில், தமிழிசை ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் மலைவாழ் மக்கள் ந்லத்துறை சார்பில் செயல்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
அந்த நிகழ்வின் போது ஐஐடி, என் ஐடி, சிவில் சர்வீஸ் போன்ற துறைகளில் மலைவாழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழிசை விரைவில் மலைவாழ் மக்கள் உள்ள பகுதியில் ஒருநாள் தங்கி அவர்களின் சம்பிரதாய கலாச்சாரங்களை தெரிந்துக்கொள்வேன் என தெரிவித்தார்.
அதன்பின்னர் கோய மற்றும் லம்பாடி மலைவாழ் மக்களுடன் நடமனாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.