வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2019 (12:04 IST)

கனிமொழி எஸ்கேப்!! தலைக்கு வந்தது ஒன்னும் பண்ணாம போச்சு...

கனிமொழியின் வெற்றி எதிர்த்து வழக்கு தொடுத்த தமிழிசை தனது வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் கனிமொழி அமோக வெற்றி பெற்று எம்பி ஆனார். 
 
இதனைதொடர்ந்து கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், முழுமையாக நிரப்பப்படாத படிவத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம் எனவும் தமிழிசை வழக்கு தொடுத்தார்.
இதனையடுத்து சமீபத்தில் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டதும், தெலுங்கானா ஆளுநராக இருப்பதால் வழக்கை தொடர விருப்பமில்லை என கூறி கனிமொழி வெற்றி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 
 
ஆனால், இந்த வழக்கை நடத்துவதா வேண்டாமா என அக்டோபர் 14 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழிசை தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் கனிமொழி எந்த சிக்கலும் இன்றி தனது பதவியில் தொடர்வார் என்பது தெளிவாகியுள்ளது.