1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pon radhakrishnan makes a controversial issue regarding modi

பிரதமர் வரவேற்பு – தமிழக பாஜகவுக்குள் கோஷ்டி பூசல் !

தமிழிசை
தமிழகம் வந்துள்ள இந்திய பிரதமர் மோடியை வரவேற்பதில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பெயர் விடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அரசு முறை வரவேற்புகள் முடிந்த பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகள் அவரை சந்திப்பது வழக்கம். பாஜக தலைவராக தமிழிசை இருந்தவரை இந்த சந்திப்புகள் முறையாக திட்டமிடப்பட்டு அனைத்து நிர்வாகிகளையும் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இப்போது அவர் இல்லாததால் தமிழக்த்தின் முக்கியத் தலைவராகக் கருதப்படும் பொன் ராதாகிருஷ்ணன் தனக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்துச் சென்று சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் அழைத்துச் சென்றவர்களில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் கூட இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது. குறிப்பாக அழைத்துச் செல்லப்படாதவர்கள் அனைவரும் முன்னாள் தலைவர் தமிழிசையின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
ஆக... ரூபஸ்ரீ, நோ ஸாரி சுபஸ்ரீ.. துண்டு சீட்டு இருந்தும் உலறல்!!