திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (07:57 IST)

கங்குலியின் முக்கிய அறிவிப்பு இதுதான்!

Ganguly
பிசிசிஐ தலைவர் கங்குலி நேற்று ஒரு புதிய முயற்சியில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தார் என்றும் அதனால் அவர் தனது பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற வதந்தி கிளம்பியது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கங்குலி தனது புதிய முயற்சி குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலக அளவிலான கல்வி சார்ந்த செயலியை தொடங்கியுள்ளதாக கங்குலி சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் 
 
தனது பிறந்த நாளான நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக கங்குலி அறிவித்ததை அடுத்து, அவர் அரசியலில் இறங்கப் போவதாகவும், ராஜ்யசபா எம்பி பதவி பெற இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் உலக அளவிலான கல்வி சார்ந்த செயலியை அவர் தொடங்கி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது